தமிழ்நாடு:


* சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.


* நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரிநாடாரை போலீசார் கைது செய்தனர்.


* 'எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் திமுக' - குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறாதது குறித்து  வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு


* தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு


* ரூ.120 கோடி கடன்..! பிரைம் சரவணா ஸ்டோரை ஜப்தி செய்தது இந்தியன் வங்கி!!


* தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பெரும்பாலான கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை.


* கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் - இபிஎஸ்


இந்தியா:


* உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அப்னா தள் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.


* பாஜகவில் இணைந்தார், முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவ்


* கோவா சட்டசபை தேர்தல் : ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு 


* சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு


உலகம்:


* பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் வலுவடைந்து வருவதாக ஐநா சபையில் இந்தியா குற்றாச்சாட்டு.


* கடன் பாக்கிக்காக லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் பங்களாவை கைப்பற்ற இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு 


விளையாட்டு:


* 2021ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக பாபர் ஆசம் தேர்வு. இந்திய அணியில் இருந்து ஒருவர் கூட இடம் பெறவில்லை.


* 2022ஆம் ஆண்டு இறுதியில் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.


* தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்கு.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண