தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பரப்புரை ஏப்ரல் 4ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா காந்தி பரப்புரை செய்வதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேராவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பிரியங்காவின் தமிழக பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.