தனியார் நிறுவனங்கள் ஜாமர் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுதொடர்பாக மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் மத்திய போலீஸ் அமைப்புகள் மட்டுமே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜாமர்களை வாங்கி பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஜாமர்களை வாங்கவோ, விற்கவோ பயன்படுத்தவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 






அதேசமயம் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து யூனியன்/மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்களின் கீழ் தேர்வு நடத்தும் அமைப்புகளும், தகுதிவாய்ந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெற்ற பிறகும் ஜாமர்களைப் பயன்படுத்தலாம். அதேபோல் உரிமம் பெற்ற டெலிகாம் சேவை வழங்குநர்களைத் தவிர எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனத்தாலும் மொபைல் சிக்னல் ரிப்பீட்டர் மற்றும் பூஸ்டரை வைத்திருப்பது, விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இதற்கு முன்னதாக கடந்த ஜனவரியில், அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அலிபாபா உள்ளிட்ட இ-காமர்ஸ் நிறுவனங்கள் வயர்லெஸ் ஜாமர்களை விற்பனை செய்வதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண