மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இன்று (திங்கள் கிழமை )நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றுள்ளது.
இரண்டாவது வாக்கெடுப்பு:
சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி முதல்வராக பொறுப்பேற்றபின் ஞாயிற்றுக்கிழமை, தனது பிரிவு சிவசேனா எம்எல்ஏக்களுடன், மும்பையில் உள்ள ஹோட்டலில் துணை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். நடந்த சபாநாயகர் தேர்தலில் பாஜக அணிக்கு 164 பேரும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா வேட்பாளருக்கு 107 வாக்குகளும் கிடைத்துள்ளன. 16 பேர் பங்கேற்கவில்லை . அதாவது வாக்களிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.
ஏக்நாத் ஷிண்டே வெற்றி :
வாக்களிக்காத அந்த 16 பேரும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுக்கு வாக்களித்தாலும் கூட, ஷிண்டே அரசு வென்றுவிடும். எனவே இன்று நடக்கும் வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என கூறப்பட்ட நிலையில் தற்போது ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றுள்ளது. இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக தொடருவார் என்பது உறுதியாகியுள்ளது.
வாக்கெடுப்பு பின்னணி :
ஷிண்டேவை ஆதரிக்கும் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கோவாவில் இருந்து சனிக்கிழமை மாலை மும்பைக்குத் திரும்பி, தெற்கு மும்பையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். NCP தலைவர் சரத் பவார், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருந்தாலும், துணை சபாநாயகரான நர்ஹரி ஷிர்வால் சபாநாயகரின் பணியை செய்ய முடியும் என்று கூறினார். காங்கிரசை சேர்ந்த நானா படோலே ராஜினாமா செய்ததையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் சபாநாயகர் பதவி காலியாக உள்ளது.சிவசேனாவின் 39 கிளர்ச்சி எம்எல்ஏக்கள் உட்பட ஷிண்டேவை ஆதரிக்கும் 50 எம்எல்ஏக்கள் சனிக்கிழமை மாலை கோவாவில் இருந்து வாடகை விமானம் மூலம் மும்பை சென்றனர். காலையில் கோவாவுக்குச் சென்ற ஷிண்டே அவர்களுடன் திரும்பிச் சென்றார். நேற்றைய நிலவரப்படி 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஷிண்டேவுக்கு சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் 10 எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் 106 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது.
அதாவது சிவசேனா 55, என்சிபி 53, காங்கிரஸ் 44, பாஜக 106, பகுஜன் விகாஸ் அகாடி 3, சமாஜ்வாதி கட்சி 2, ஏஐஎம்ஐஎம் 2, பிரஹர் ஜனசக்தி கட்சி 2, எம்என்எஸ் 1, சிபிஐ (எம்) 1, பிடபிள்யூபி 1 , ஸ்வாம்பிமணி பக்ஷா 1, ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா 1, ஜான்சுராஜ்ய சக்தி கட்சி 1, கிராந்திகாரி ஷேத்காரி கட்சி 1, மற்றும் சுயேச்சைகள் 13 என்ற நிலையில் இருந்தது.
கடந்த மாதம் சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கே மரணம் அடைந்ததால் அந்த இடம் காலியாக இருந்தது. இரண்டு என்சிபி உறுப்பினர்கள் - துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் சகன் புஜ்பால் - கோவிட் -19 நேர்மறை சோதனை செய்தனர் அதே நேரத்தில் மற்ற இரண்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் - அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் - தற்போது சிறையில் உள்ளனர். எனவே பெரும்பான்மையை நிரூபிக்க மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதில் ஷிண்டே தலைமியிலான அரசு வெற்றிப்பெற்று நாற்காலியை தக்க வைத்துள்ளது.