இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று காலை இந்தியா வந்தடைந்தார். இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்த அவர் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு சென்று ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், அங்கிருந்த ராட்டை சுற்றினார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.