போர்ட் பிளேயரில் ரூ.710 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 18ஆம் தேதி) காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார். 




இது தொடர்பான செய்தி வெளியீட்டில், “இணைப்பு, உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே இந்த அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. மொத்தம் 40,800 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் திறப்பு விழா, தீவின் யூனியன் டெரிட்டரியின் இணைப்பை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். போர்ட் பிளேர் விமான நிலையத்தில் இரண்டு போயிங் 767 - 400 மற்றும் இரண்டு ஏர்பஸ் 321 வகை விமானங்களுக்கு ஏற்ற ஏப்ரானும் ரூ. 80 கோடி செலவில் கட்டப்பட்டு, தற்போது ஒரே நேரத்தில் பத்து விமானங்கள் நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. 




மேலும், "இயற்கையை முன் மாதிரியாக கொண்டு, விமான நிலைய முனையத்தின் கட்டடக்கலை வடிவமைப்பு கடல் மற்றும் தீவுகளை சித்தரிக்கும் சிப்பி (shell) வடிவ அமைப்பை ஒத்திருக்கிறது. புதிய விமான நிலைய முனைய கட்டிடத்தில் வெப்ப அதிகரிப்பைக் குறைக்க Double Insulated Roofing System, கட்டிடத்தின் உள்ளே செயற்கை ஒளி பயன்பாட்டைக் குறைக்க பகல் நேரத்தில் இயற்கையான சூரிய ஒளியை அதிகபட்சமாக உட்செலுத்துவதற்கான ஸ்கைலைட்கள், LED விளக்குகள், low heat gain glazing போன்ற பல அம்சங்கள் உள்ளன. நிலத்தடி நீர் தொட்டியில் மழைநீர் பிடிப்பு, 100 சதவீத சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீருடன் கூடிய இடத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 500 KW திறன் கொண்ட சூரிய மின் நிலையம் ஆகியவை தீவுகளின் சுற்றுச்சூழலில் தாக்கத்தை குறைக்க உறுதி செய்யும் ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் மற்ற சில அம்சங்களாகும்.




அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு நுழைவாயிலாக, போர்ட் பிளேர் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான இடமாகும். விசாலமான புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் விமானப் போக்குவரத்தை அதிகரிக்கும், மேலும் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த உதவும். இது உள்ளூர் சமூகத்திற்கு மேம்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அதுமட்டுமின்றி பிராந்தியத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்கவும் உதவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.        


Atrocities On Dalits : கொடூரத்தின் உச்சம்.. காதலன் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை..தலித் சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்


Sonia Gandhi Video: விவசாய பெண் தொழிலாளர்களுடன் நடனமாடும் சோனியா காந்தி.. வைரல் வீடியோ