மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபா மோடி இன்று அதிகாலை காலமானார். மறைந்த தனது தாயாருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, மதிப்புகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தன்னலமற்ற கர்மயோகி என்று குறிப்பிட்டார்.






பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபா மோடி தனது 100வது வயதில் காலமானார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 


பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், " நூறாண்டு வாழ்ந்த ஒருவர் கடவுளின் காலடியில் உள்ளார்" என்று எழுதினார். தனது தாயார் படத்தைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், “ஒரு துறவியின் பயணம், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளம் மற்றும் மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் என் தாயிடம் உணர்ந்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 


பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் அகமதாபாத் சென்றடைந்தார். கொல்கத்தாவில்: ஹவுரா, வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார் மோடி. பின்  நமாமி கங்கேயின் கீழ், தேசிய கங்கா கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் அகமதாபாதிலிருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்பார் என அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் கடந்த புதன்கிழமை மதியம் தனது தாயாரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 ஹீராபா தனது இளைய மகன் பங்கஜ், ஓய்வுபெற்ற குஜராத் அரசு அதிகாரியுடன் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ராய்சன் என்ற இடத்தில் வசித்து வந்தார். ஐ.நா. மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஸ்ரீமதி ஹீராபா மோடி 30/12/2022 அன்று அதிகாலை 3.30 மணிக்கு (அதிகாலை) ஐ.நா. மேத்தா இதய மருத்துவமனையில் சிகிச்சையின் போது காலமானார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. 




மத்திய உள்துறை அமைச்சர் அமித், "மதிப்பிற்குரிய மாதாஜி ஹீரா பாவின் மறைவு குறித்து அறிந்து வருத்தமடைகிறேன். ஒரு மனிதனின் வாழ்க்கையின் முதல் தோழியும் ஆசிரியையும் அம்மா தான், தாயாரை இழந்தால் ஏற்படும் வலி உலகின் மிகப்பெரிய வலி என்பதில் சந்தேகமில்லை" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 






பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஹீரா பா, மாதாஜீயின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஒரு தாயின் மரணம் ஒருவரது வாழ்வில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விடுகிறது. பிரதமருக்கும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.  






அம்மாவுடனான பந்தத்தைப் பற்றி அடிக்கடி பேசும் பிரதமர் மோடி, சமீபத்தில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரைச் சந்தித்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம் தனது தாயின் 99 வது பிறந்தநாளில் பிரதமர் மோடி ஒரு வலைப்பதிவை எழுதினார் அதில், "இன்று, எனது தாயார் ஸ்ரீமதி ஹீராபா தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதிர்ஷ்டவசமாகவும் உணர்கிறேன். இது அவரது பிறந்த நூறாவது ஆண்டாக இருக்கிறது. என் தந்தை உயிருடன் இருந்திருந்தால், அவரும் கடந்த வாரம் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். 2022 ஆம் ஆண்டு எனது தாயின் நூற்றாண்டு விழா தொடங்குவதால் ஒரு சிறப்பான ஆண்டு இது" என குறிப்பிட்டிருந்தார்.