பிரதமரின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.




பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வருகிறார். பிரதமர் மோடியின் தாயார் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். 


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குஜராத் மாநில சட்டச்சபை தேர்தலில் பிரதமர் மோடி தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் இந்த தேர்தலின் போது பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






மோடியின் தாயார் உடல் நலம் பெற வேண்டி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.






கட்சித்தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அவர் விரைவில் குணமடைய வேண்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.