பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி ((Heeraben Modi ) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  திடீரென உடல்நலன் பாதிக்கப்பட்ட ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள  யூ. என். மேத்தா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் தாயார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




இது தொடர்பாக யூ.என். மேத்தா மருத்துவமனை வெளியிட்டுள்ள (U N Mehta Institute of Cardiology & Research Centre) செய்திக்குறிப்பில், ‘பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக உள்ளதென’ தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு வயதாகும் ஹீராபென் குஜராத்தில் உள்ள ரைசன் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். சமீபத்தில்,  குஜராத் சட்டச்சபை தேர்தலுக்கு முன்பாக குஜராத் சென்றிருந்த மோடி, தாயார் ஹீராபென்னை சந்தித்து அவரிடம் ஆசிப் பெற்றார். அவருடன் நேரம் செலவிட்டு தேநீர் அருந்தினார். தாயார் உடல்நலம் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். குஜராத் தேர்தலில் ஹீராபென் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்தார். பிரதமர் மோடி பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும்போது தாயாரைச் சந்திந்து ஆசிகளைப் பெறுவார். இரவு உணவு தாயாருடன் அமர்ந்து சாப்பிடுவார். இது மோடியின் வழக்கமான திட்டம். 


கார் விபத்தில் மோடியின் தம்பி காயம்:


கர்நாடகம் மாநிலம் மைசூரூ அருகே உள்ள பந்திப்பூர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி காயமடைந்துள்ளார்.  பிரதமரின் சகோதரர், அவரது மனைவி, அவர்களது மகன் , மருமகள், பேரக்குழந்தைகள் உட்பட 6 பேர் மைசூரூவில் இருந்து பந்திப்பூர் வனவியல் பூங்காவுக்கு சென்றகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானாது. இந்த விபத்தில் பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் J.S.S தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   


இப்போது பிரதமரின் தாயாரும் உடல்நலமின்றி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் உடல்நிலை சரியில்ல்லாமல் இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.