கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகள் அடங்கிய தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். தமிழ்க் கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கும், இந்திய சுதந்திரப் போராட்ட நினைவுகளுக்கும், தமிழ்நாட்டின் பெருமைக்கும் இன்று ஒரு சிறந்த வாய்ப்பு என்று கூறினார். 


பாரதி படைப்புகள்:


பாரதியாரின் படைப்புகளின் தொகுப்புகள் சீனி விஸ்வநாதனால் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள், தத்துவ விளக்கக்காட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.


சீனி விஸ்வநாதனின் கடின உழைப்பு ஒரு தவம் என்றும், இது வரும் பல தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் என்றும் பிரதம் தெரிவித்துள்ளார்.


மேலும் பிரதமர் தெரிவித்ததாவது, “ இந்த நூல் பாரதியின் படைப்புகளை மட்டும் கொண்டிருக்கவில்லை, அவரது இலக்கியம் அல்லது இலக்கியப் பயணம் குறித்த உள்ளார்ந்த பின்னணித் தகவல்களையும், அவரது படைப்புகள் குறித்த ஆழமான தத்துவ பகுப்பாய்வையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வர்ணனைகள், விளக்கங்கள் மற்றும் விரிவான சிறுகுறிப்புகள் உள்ளன. "இந்தப் பதிப்பு ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகளுக்கு பாரதியின் சிந்தனைகளின் ஆழத்தைப் புரிந்துகொள்வதற்கு பெரும் உதவியாக இருக்கும், அதே நேரத்தில், அவர் வாழ்ந்த காலகட்டத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கும்" 




இலக்கிய பாரம்பரியம்:


புராணங்களில் முறையாக பாதுகாக்கப்பட்ட மகரிஷி வியாசரின் எழுத்துக்கள் இன்னும் எதிரொலிக்கின்றன. உதாரணங்களாக, சுவாமி விவேகானந்தரின் முழுமையான படைப்புகள், டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் உரைகள், தீன் தயாள் உபாத்யாயாவின் முழுமையான படைப்புகள் ஆகியவை சமுதாயத்திற்கும், கல்விக்கும் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளன என்றார். திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்க்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், இது அதன் இலக்கிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக இருக்கும் , பப்புவா நியூ கினியா பயணத்தின் போது டோக் பிசினில் திருக்குறளை வெளியிடவும், அதன் குஜராத்தி மொழிபெயர்ப்பை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வெளியிடவும் தமக்கு வாய்ப்பு கிடைத்தது.



எழுச்சி கண்ட பாரதி:


நாட்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு பணியாற்றிய சிறந்த சிந்தனையாளர் சுப்பிரமணிய பாரதி, அந்த நேரத்தில் நாட்டிற்கு தேவையான ஒவ்வொரு திசையிலும், அவர் பணியாற்றினார் . பாரதியார் தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியின் பாரம்பரியம் மட்டுமல்ல, இந்தியாவின் எழுச்சி மற்றும் பெருமையை கனவு கண்ட பாரதி பாரத அன்னையின் சேவைக்காக தனது ஒவ்வொரு மூச்சையும் அர்ப்பணித்த ஒரு சிந்தனையாளர் . பாரதியாரின் பங்களிப்பை மக்களுக்கு பரப்பும் கடமை உணர்வுடன் அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது 


2020-ம் ஆண்டில், கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதுமே பாதிக்கப்பட்ட போதிலும், சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு தினத்தை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதை அரசு உறுதி செய்தது . இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மகாகவி பாரதியின் சிந்தனைகள் மூலம் இந்தியாவின் பார்வையை உலகிற்கு தொடர்ந்து முன்வைத்து வருகிறது.


”பிணைப்பு உள்ளது”


தமக்கும் சுப்பிரமணிய பாரதிக்கும் இடையே  உயிருள்ள மற்றும் ஆன்மீக பிணைப்பாக காசி திகழ்கிறது, செலவிடப்பட்ட நேரமும், சுப்பிரமணிய பாரதியுடனான உறவும் காசியின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்று குறிப்பிட்டார். ஞானம் பெறுவதற்காக பாரதியார் காசிக்கு வந்ததாகவும், அங்கேயே  தங்கியிருந்ததாகவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் இன்னும் காசியில் வசித்து வருகின்றனர். காசியில் வசித்தபோது பாரதியார் தமது அற்புதமான மீசையை அழகுபடுத்த உத்வேகம் பெற்றார்.


காசியில் வசித்தபோது பாரதியார் தமது பல படைப்புகளை எழுதினார் என்றும் குறிப்பிட்டார். வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பங்கேற்ற பிரதமர், இந்தப் புனிதமான பணியை வரவேற்றதுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பங்களிப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட இருக்கை நிறுவப்பட்டிருப்பது அரசின் நல்வாய்ப்பாகும் .


நூற்றாண்டு ஆளுமை:


"சுப்பிரமணிய பாரதி பல நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகை அலங்கரிக்கும் ஒரு ஆளுமையாவார். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த போதிலும், அவர் நம் தேசத்தில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளார். தமது சக்திவாய்ந்த வார்த்தைகள் மூலம் அவர் சுதந்திரத்தைக் கற்பனை செய்தது மட்டுமல்லாமல், மக்களின் கூட்டு உணர்வையும் தட்டியெழுப்பினார்.


பத்திரிகைத் துறையில் புரட்சி: 


"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?", அதாவது இந்த சுதந்திர தாகம் எப்போது தணியும்? அடிமைத்தனத்தின் மீதான மோகம் எப்போது முடிவுக்கு வரும்? இதழியல் மற்றும் இலக்கியத்திற்கு பாரதியின் பங்களிப்புகளைப் பாராட்டிய மோடி, "பாரதியார் 1906 ஆம் ஆண்டில், இந்தியா வீக்லி இதழைத் தொடங்கியதன் மூலம் பத்திரிகைத் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார், அரசியல் கார்ட்டூன்களை வெளியிட்ட முதல் தமிழ் செய்தித்தாள் இதுவாகும். 



சமூகம் மற்ற இன்னல்களில் சிக்கித் தவித்த காலங்களில்  கூட, பாரதியார் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றின் உறுதியான ஆதரவாளராக இருந்தார் என்றும், அறிவியல் மற்றும் புதுமைகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். தூரத்தைக் குறைத்து நாடு முழுவதையும் இணைக்கும் ஒரு தகவல் தொடர்பை பாரதியார் எதிர்பார்த்தார்.


சுப்பிரமணிய பாரதியின் வரிகள், 'காசி நகர் புலவர் பேசும் உரைதான், காஞ்சியில், கேட்பதற்கோர் கருவி செய்வோம்'; அதாவது, காஞ்சியில் அமர்ந்து கொண்டு பனாரஸ் துறவிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்க ஒரு உபாயம் இருக்க வேண்டும். இந்தியாவை தெற்கிலிருந்து வடக்கிற்கும், கிழக்கிலிருந்து மேற்கிற்கும் இணைப்பதன் மூலம் டிஜிட்டல் இந்தியா இந்தக் கனவுகளை நனவாக்குகிறது என்று பிரதமர் வலியுறுத்தினார்.


பாஷினி போன்ற செயலிகள் மொழி தொடர்பான அனைத்து சிக்கல்களையும் தீர்த்துள்ளன என்று அவர் கூறினார். இந்தியாவின் ஒவ்வொரு மொழியையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்தியாவின் ஒவ்வொரு மொழி மீதும் மரியாதையும் பெருமிதமும்  உள்ளது, இது ஒவ்வொரு மொழிக்கும் சேவை செய்வதற்கு வழிவகுக்கிறது என்றார்.


”விலைமதிப்பற்றவை”


பாரதியின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அவரது படைப்பு பண்டைய தமிழ் மொழிக்கு விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்று குறிப்பிட்டார். "உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு சுப்பிரமணிய பாரதியின் இலக்கியங்கள் ஒரு பொக்கிஷம்.


அவரது இலக்கியங்களைப் பரப்பும் போது நாமும் தமிழ் மொழிக்குச் சேவை செய்கிறோம். அவ்வாறு செய்வதன் மூலம், நம் நாட்டின் பண்டைய பாரம்பரியத்தைப் பாதுகாத்து ஊக்குவிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், தமிழின் பெருமையைப் போற்றுவதற்காக நாடு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையில் தமிழின் பெருமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் தமக்குக் கிடைத்தது என்றும் கூறினார். உலகெங்கும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்களை திறக்க உள்ளோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.