நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. இதனையடுத்து வீர தீர செயல்கள் புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, நாட்டின் பண்பாட்டை பறை சாற்றும் கலைநிகழ்ச்சிகள் முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அதன்படி, முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி டெல்லி ராஜபாதையில் நடைபெற்றது. நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆயுதங்கள், விமானங்கள் ஆகியவையும் அணிவகுப்பில் கலந்து கொண்டன. இவற்றை குடியரசு தலைவர் வீர வணக்கம் செலுத்தி ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் பண்பாட்டை பறை சாற்றும் கலைநிகழச்சிகள் முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
குடியரசு தின விழா முடிந்ததும் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விராட் என்ற குதிரை கௌரவிக்கப்பட்டு பணியில் இருந்து அக்குதிரைக்கு ஓய்வளிக்கப்பட்டது..
மேலும் அந்தக் குதிரைக்கு ராணுவ தலைமை அதிகாரி சார்பில் பாராட்டு பதக்கமும் வழங்கப்பட்டது. இதனையடுத்து விராட் குதிரைக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரியாவிடை அளித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Kamal Haasan House of Khaddar: தலைசுற்ற வைக்கும் விலை.! ஆன்லைன் ஆடை விற்பனையை தொடங்கிய கமல்.!