Presidential Election Result 2022 LIVE: இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராகிறார் திரெளபதி முர்மு..!
India Presidential Election Result 2022 LIVE: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்பான உடனுக்குடன் தகவல்கள் இதோ...
மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மொத்த வாக்குகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறார் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு. அவர் வாக்குகளின் மதிப்பு 5,77,777. எதிர்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகளின் மதிப்பு 2,61,062. மூன்று சுற்றுகளிலும் திரெளபதி முர்மு முன்னிலை பெற்றதால் அவரது வெற்றி உறுதியாகி விட்டது.
குடியரசுத்துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில், தங்களை கலந்தாலோசிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 2 ஆம் சுற்று நிறைவில், பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அவர் பெற்ற வாக்குகளின் மதிப்பு 4,83,299 ஆகும்.
15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 18 ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் படங்கள்:
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் முதலில் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்பிக்களின் வாக்குகள் எண்ணப்படும்.
கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணிக்கு எண்ணப்பட உள்ளன.
பாஜக சார்பில் களமிறங்கிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் த்ரௌபதி முர்முவிற்கு சிவசேனா கட்சி ஆதரவளித்திருந்தது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஒடிசாவை சேர்ந்த த்ரௌபதி முர்மு போட்டியிட்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
Background
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் திரௌபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களமிறங்கியிருந்தனர். இந்தியா முழுவதும் சுமார் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் உட்பட 31 இடங்களில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று முதல் டெல்லிக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறுபவர் இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வரும் 25ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனால் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாக்கு எண்ணும் முறை:
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணி முதல் எண்ணப்பட உள்ளன. முதலில் நாடாளுமன்ற எம்பிக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் வரிசைப்படி உள்ள முதல் 10 மாநிலங்களின் எம்.எல்.ஏக்கள் பதிவு செய்திருந்த வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் அடுத்த 10 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இப்படி அனைத்து மாநிலங்கள் சட்டப்பேரவையில் பதிவான வாக்குகள் அனைத்தும் மாலைக்குள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது
முதல் பழங்குடியின வேட்பாளர் திரௌபதி முர்மு:
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் ஆதரவு பெற்ற வேட்பாளராக திரௌபதி முர்மு களமிறங்கியுள்ளார். ஒடிசா மாநிலத்தின் மையூர்கஞ் மாவட்டத்தில் சந்தால் என்ற பழங்குடியின வகுப்பில் தௌரபதி முர்மு பிறந்தார். இவருடைய தந்தை கிராம் குழுவின் தலைவராக இருந்தார். இவர் சிறுவயதில் மிகவும் கடினமான சூழல்களை எதிர்கொண்டு படிப்பை முடித்தார். 1979 ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை இவர் கிளர்காக அரசுத் துறையில் பணியாற்றினார்.
அதன்பின்னர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக அந்தப் பணியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் இவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்தார். அப்போது இவர் சம்பளமே வாங்காமல் அப்பள்ளியில் வேலை செய்தார். அதற்கு அவர்,”நான் செய்வது வேலையில்லை அது ஒரு பொது சேவை. என்னுடைய குடும்பத்தை பார்த்து கொள்ள என்னுடைய கணவரின் சம்பளம் மட்டும் போதுமானது” எனத் தெரிவித்திருந்தார்.
1997ஆம் ஆண்டு அரசியலில் இவர் நுழைந்தார். முதலில் ராய்ரங்கப்பூர் பகுதியின் கவுன்சிலராக தேர்வாகினார். அதன்பின்னர் 2000 மற்றும் 2009 ஆகிய இரண்டு தேர்தல்களில் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியிருந்தார். அதைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியில் இவர் 2021ஆம் ஆண்டு வரை நீடித்தார். இந்தச் சூழலில் தற்போது அவர் பாஜகவின் ஆதரவு வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -