குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக கடந்த 26ஆம் தேதி, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ருந்தார். அதன்பிறகு, அங்கிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 30ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மேலும், அவரை ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தினர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.