இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 89 ஆயிரத்து 129 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 23 லட்சத்து 3 ஆயிரத்து 131 - இல் இருந்து ஒரு  கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260- ஆக அதிகரித்துள்ளது.




 


ஒரே நாளில் கொரோனாவுக்கு 714 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 396-ல் இருந்து ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 110-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 44 ஆயிரத்து 202 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்து 25 ஆயிரத்து 39-இல் இருந்து ஒரு கோடியே 15 லட்சத்து 69 ஆயிரத்து 241 ஆக உள்ளது. இதுவரை 7 கோடியே 30 லட்சத்து 54 ஆயிரத்து 295 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.