சர்தார் சரோவர் அணையின் நதிப்படுகையில் அமைந்துள்ள இந்த கால்வாய் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நீர் ஆதாரங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில், குஜராத் சட்டப்பேரவையில் குஜராத் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் குலாப்சின் ராஜ்புத் எழுப்பிய கேள்விக்கு அம்மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தது. அதில், "(2019-20) இடையில் பனஸ்காந்தா மாவட்டத்தில் கால்வாய் உடைந்த சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019ல் 41 முறை கால்வாய் உடைந்ததாகாவும், 2020 ல் அது 59 ஆக உயர்ந்ததாகவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கால்வாயை பழுதுபார்க்கும் செலவு ஒப்பந்தக்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்தது. 72 வழக்குகளில் பழுதுபார்க்கும் செலவு, 10 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், அதிகபட்சமாக ஜலாரம் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
சர்தார் சரோவர் அணை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் பாயும் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையில் இருந்து, 458 கி.மீ., தூரத்துக்கு ராஜஸ்தான் எல்லை வரை, கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. 62,099 கிலோமீட்டர் கால்வாய் வலையமைப்புகள் நிறைவுபெற்றதாகவும், 7,729 கிலோமீட்டர் கால்வாய் வலையமைப்பு உருவாக்கும் பணிகள் நிறைவடையவில்லை எனவும் அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தெரிவித்தது.