குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளை ஜூலை.24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது.
அனைத்து எம்பிக்களுக்கும் இதயத்தில் இடமுண்டு
குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை அளித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், ”ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்திய குடியரசுத் தலைவராக இங்கே தான் பதவியேற்றேன். இங்குள்ள அனைத்து எம்.பிக்களுக்கும் என் இதயத்தில் தனி இடம் உண்டு.
காந்திய தத்துவத்தைப் பின்பற்றுங்கள்
நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், பாராளுமன்றத்தில் விவாதம், கருத்து வேறுபாடு உரிமைகளைப் பயன்படுத்தும் போது எம்பிக்கள் எப்போதும் காந்திய தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும்" என்று கோவிந்த் கூறினார்.
தொடர்ந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்ட அவர், அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவை மனதார வாழ்த்துவதாகவும், அவரது வழிகாட்டுதலால் நாடு பயனடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பதவிக் காலத்தில் ஆதரவளித்த பிரதமர் மோடியின் அமைச்சர்கள் குழு வி.பி. வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் படிக்க: மேற்குவங்கத்தை அதிரவைத்த ரெய்டு.. மம்தாவின் கட்சியை சிக்கவைத்த நடிகை அர்பிதா முகர்ஜி...யார் இவர்?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்