உஜ்ஜல் புயான், எஸ்.வி, பாட்டி ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளார். 


தெலுங்கனா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.பாட்டி ஆகிய இருவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்தார்.


ஜூலை- 5 ம் தேதி கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் நியமிக்க உத்திவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


 உஜ்ஜல் புயான் கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர். எஸ்.வி. பட்டி ஆந்திர பிரதேசம்  உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர். பிறகு, உஜ்ஜல் தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், எஸ்.வி.பட்டொ கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பொறுப்பு வகித்து வந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இவர்கள் நியமித்தததால், நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளத்து. (34 நீதிபதிகளை நியமிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.)


புயான் கெளஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதியாக 2011,அக்டோபர்,17 வரை பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.