சிக்கிம் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலையில், பிரேம் சிங் தமாங் முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார்.
சிக்கிம் தேர்தல் முடிவுகள்:
கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் ஆளும் கட்சியாக இருந்த சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) பெரும்பான்மையான இடங்களை பெற்று வெற்றி பெற்றதால் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியானது. சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில், SKM கட்சியானது மொத்தம் உள்ள 32 இடங்களில் 31 இடங்களைக் கைப்பற்றியது. எதிர்க்கட்சியான SDF ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், இன்று கேங்டாக்கில் உள்ள பல்ஜோர் ஸ்டேடியத்தில் சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங். பதவியேற்பு விழாவில், ஆளுநர் லக்ஷ்மண் ஆச்சார்யா, முதலமைச்சர் தமாங் மற்றும் அவரது அமைச்சர்கள் குழுவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்நிலையில் , அங்கு காங்டாக் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.