கட்சியில் சேர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோரை சேர்க்க கட்சியில் சேர்க்க சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கட்சியில் இணையாவிட்டாலும் அவர் வழங்கிய ஆலோசனைகளுக்கு நன்றி என்றும் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், 2024 ஆம் ஆண்டுக்கான அதிகாரமளிக்கப்பட்ட செயல் குழுவை உருவாக்கி, வரையறுக்கப்பட்ட பொறுப்புடன் குழுவின் ஒரு பகுதியாக பிரசாந்த் கிஷோர் கட்சியில் சேர அழைத்தோம். அதற்கு அவர் மறுத்துவிட்டார். அவரது முயற்சிகள் மற்றும் கட்சிக்கு வழங்கப்பட்ட ஆலோசனையை நாங்கள் பாராட்டுகிறோம்.






தொடர்ந்து, பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் ஏன் சேரவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், காங்கிரஸில் ஒரு பகுதியாக கட்சியில் சேரவும் மற்றும் தேர்தல்களுக்கு பொறுப்பேற்கவும் காங்கிரஸின் தாராளமான வாய்ப்பை நான் நிராகரித்தேன்.






காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள அடிப்படை பிரச்சனைகளை சீர்திருத்தங்கள் மூலம் தீர்க்கும் துணிச்சல் வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை என தெரிவித்துள்ளார். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண