சிபிஎஸ்இ 2-ம் கட்ட பொதுத்தேர்வு நாடு முழுவதும் இன்று ( ஏப்ரல் 26) தொடங்கிய நிலையில், 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.


கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த முறை சிபிஎஸ்இ 10 வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதன்படி முதல் பருவப் பொதுத்தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், இரண்டாம் பருவப் பொதுத்தேர்வு  2022ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களிலும் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.  


கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பிற்கு முதல் பருவ தேர்வுத் தொடங்கி நடைபெற்றது. அதேபோல் 10 வகுப்பிற்கு பொதுத் தேர்வு 17ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்த முதல் பருவ பொதுத் தேர்வு எம்சிக்யூ வடிவில் கேட்கப்பட்டது. அத்துடன் இந்தத் தேர்வு மொத்தமாக 90 நிமிடங்கள் நடைபெற்றது. அதேபோல சிபிஎஸ்இ மாணவர்களுக்கான இரண்டாம் கட்டப் பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 


அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் கட்டப் பொதுத் தேர்வு (term 2) இன்று (ஏப்ரல் 26ம் தேதி) தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், இந்தத் தேர்வு ஆஃப்லைன் மூலம் நேரடியாக நடைபெற்று வருகிறது.  



10ஆம் வகுப்புத் தேர்வை நாடு முழுவதும் 7,406 தேர்வு மையங்களில் 21.16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 6,720 தேர்வு மையங்களில் 14.54 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி, தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 


ஐசிஎஸ்இ தேர்வுகள் நாளை (ஏப்ரல் 27ஆம் தேதி) முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளின் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டங்களில் இருந்து அணிசேரா இயக்கங்கள், பனிப்போர்க் காலம், ஆப்ரோ-ஆசியப் பகுதிகளில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய பேரரசுகளின் வரலாறு மற்றும் தொழில்துறை புரட்சி பற்றிய அத்தியாயங்களை சிபிஎஸ்இ நீக்கியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண