ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில், ‘ஜார்க்கண்டின் வரி செலுத்துபவராக, ஜார்க்கண்டில் ஏன் இத்தனை ஆண்டுகளாக மின் நெருக்கடி நிலவுகிறது என்பதை அறிய விரும்புகிறீர்களா?. மின் ஆற்றலை சேமிப்பதை உறுதி செய்வதன் மூலம் நாங்கள் எங்கள் பங்கைச் செய்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.
அதிக மின்சாரத் தேவை காரணமாக மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறை நீண்ட நேரம் மின்வெட்டுக்கு வழிவகுக்கும் என்ற செய்திகளுக்கு மத்தியில் சாக்ஷியின் ட்வீட் வந்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால், மின் பற்றாக்குறையை சமாளிக்க மின் நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதற்கிடையில், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். மத்திய மற்றும் மாநில அளவில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு கைகோர்த்து செயல்படுமாறு சிங் கேட்டுக் கொண்டதாக மின் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிலக்கரி விநியோகத்தில் உள்ள தளவாடத் தடைகளைச் சமாளிக்க ரயில்வே அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் பவர் ஜென்கோஸ் சரக்கு ரேக்குகளை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். நிலக்கரி மற்றும் மின்சக்தி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்