தெலங்கானா மாநிலத்தை தெலங்கானா ராஸ்டிரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகரராவ் தலைமையிலான டிஆர்.எஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. வரும் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரின் பதவிக்காலம் முடிவிற்கு வர உள்ளது. இதனால் இந்தாண்டு முதலே அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அங்கு கட்சிகள் தங்களுடைய வேலையை தொடங்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


இந்நிலையில் ஆளும் டிஆர்.எஸ் கட்சிக்கு  பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனம் ஆலோசனை வழங்கி வருவதாக அக்கட்சியின் தலைவரும் தகவல் தொடர்புத்துறை அமைச்சருமான ராமராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, “எங்களுக்கு I-PAC நிறுவனத்தை பிரசாந்த் கிஷோர் அறிமுகம் செய்து வைத்தார். அவருடன் நாங்கள் இணைந்து பணியாற்றவில்லை. ஆனால் அந்த நிறுவனத்துடன் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.


பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்திடம் இருந்து விலகி தனியாக அரசியல் செய்து வருகிறார். I-PAC நிறுவனத்திடம் தான் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். டிஆர்.எஸ் கட்சியை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சந்திரசேகரராவ் வழி நடத்தி வருகிறார். ஆகவே வரும் தேர்தலில் டிஜிட்டல் தளத்தில் நாங்கள் பின் தங்கியிருக்க கூடாது என்பதற்காக ஐ-பிஏசி நிறுவனத்துடன் இணைந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 


கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தாக செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில் தற்போது I-PAC நிறுவனம் டிஆர்எஸ் கட்சியுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண