தான் கபடி விளையாடும் வீடியோவை எடுத்தவரை ராவணன் என அழைத்துள்ளார் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாகூர். அவருடைய முதுமைக் காலமும், அடுத்த பிறவியும் நாசமாக போகும் என்றும் பிரக்யா சிங் சபித்துள்ளார். 


கடந்த 2008ம் ஆண்டு மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், பிரக்யா சிங் தாக்குரின் வாகனம் பயன்படுத்தப்பட்டது என புலன் விசாரணையில் தெரிய வந்தது.  இந்த வழக்கில், பிரக்யா சிங் தாக்குர், ராணுவ அதிகாரி புரோகித், 3 முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்துள்ளதும், அவர்கள் மூலம் குண்டு வெடிப்பு நாசவேலை நடத்தப்பட்டதும் காவல்துறையினரின் புலன் விசாரணையில் தெரியவந்தது. 


மலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகிய சேர்க்கப்பட்ட பிரக்யா சிங் தாகூர், 2017  ஆண்டு பிணை வழங்கப்படுவதற்கு முன்னர் ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2019 இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியியட்ட இவர், முன்னாள மத்தியப் பிரதேச முதல்வரும், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளுருமான திக்விஜய் சிங்கை 3,64,822 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


 இந்நிலையில் ஏற்கெனவே சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் பல பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும், 2017ல் தேசிய புலனாய்வு முகமை பிரக்யா சிங் மீது பதிவுசெய்யப்பட்ட கடுமையான குற்றப்பிரிவுகளை தளர்த்தினர். இதனையடுத்து, நிபந்தனை ஜாமினில் வெளியே விடப்பட்டார். 2021 ஜனவரியில், அவரின் மோசமான உடல்நிலை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மும்பை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் தாகூரை நேரில் ஆஜாரகுவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து உத்தரவிட்டது. பல காலமாக சக்கர நாற்காலியில் இருந்த அவருக்கு, அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி மருத்துவ காரணங்களுக்காக பிணை வழங்கப்பட்டது. 


இதையடுத்து கடந்த ஜூலை மாதம் பிரக்யா சிங் தாகூர் நவராத்திரி விழாவில் நடனமாடும் வீடியோ சமூக ஊடங்களில் பேசும் பொருளானது. அதேபோல அவர் தனது நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடும் காட்சி வைரலானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவர் கபடி விளையாடும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கவனத்தை பெற்று கடும் விமர்சனத்திற்குள்ளாகியது. தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டதுபோல அவருக்கு மருத்துவ சிக்கல்கள் இருப்பதுபோல தெரியவில்லை. சக்கர நாற்காலியில் இருப்பவர் எப்படி துள்ளி குதித்து கபடி ஆட முடியும் என்றும் சிலர் கேள்வியெழுப்பினர். 




இதுகுறித்த தனது மௌனத்தை கலைத்துள்ளார் பிரக்யா சிங். துர்கா பண்டிகையையொட்டி ஆரத்தி எடுக்கத்தான் சென்றதாகவும், அப்போது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சில விளையாட்டுவீரர்கள் அழைத்ததன் பெயரிலேயே சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அதன் சிறிய வீடியோ க்ளிப் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதைப்பார்த்து யாருக்காவது எரிச்சல் ஏற்பட்டிருந்தால் அதற்கு ஒருவரினுள் இருக்கும் ராவணன்தான் காரணம். சிந்தி சமூகத்தை சேர்ந்த ஒரு சகோதரர்தான் இதை செய்துள்ளார். அவர் என்னுடைய ஒரு பெரிய எதிரி, ஆனால் நான் அவருக்கு எதிரி அல்ல” என தெரிவித்துள்ளார் பிரக்யா சிங். நான் அவருடைய எந்த பொக்கிஷத்தை அவரிடமிருந்து பறித்துக்கொண்டேன் என தெரியவில்லை. ஆனால் ராவணன்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார். 


தான் கபடி விளையாடும் வீடியோவை எடுத்தவரை ராவணன் என அழைத்துள்ளார் போபால் எம்.பி. பிரக்யா சிங் தாகூர். அவருடைய முதுமைக் காலமும், அடுத்த பிறவியும் நாசமாக போகும் என்றும் அவர் சபித்துள்ளார்.