அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடைக்கோடியில் இருக்கும் ஒருவர் கூட தடுப்பூசி போடாமல் இருக்கக்கூடாது என்பதற்காக ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தின் நடுவே சுகாதார பணியாளர் ஒருவர் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஆர்ப்பரித்து ஓடும் வெள்ளத்திற்கு நடுவே மூங்கில்களைக் கொண்டு கயிறுக் கட்டி பாலம் போல அமைக்கப்பட்டுள்ளது. இரண்டே இரண்டு மூங்கில்களை அடித்தளமாகக் கொண்டு தடுப்பூசி பெட்டகத்தை தோள்களில் சுமந்தவாறு நடந்து வருகிறார் சுகாதாரப்பணியாளர். வேகமாக ஓடி வரும் வெள்ளத்தின் நடுவே அவர் நடந்து வரும் காட்சி பார்ப்பவர்களுக்கு திகிலூட்டும் வகையில் உள்ளது.


இந்நிலையில் இந்த வீடியோவை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் அலுவலகம் சார்பில் ட்விட்டரில்  பகிரப்பட்டுள்ளது. எங்கள் தைரியமான சுகாதார ஊழியர்கள் அருணாச்சல பிரதேசத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்காக பொங்கி வரும் ஆற்றைக் கடந்து செல்கிறார்கள். இதனால் தடுப்பூசி போடப்படாமல் யாரும் இருக்கமாட்டார்கள். இத்தகைய தைரியமான சுகாதார ஊழியர்கள் நாட்டில் தடுப்பூசி எண்ணிக்கையை 100 கோடியாக எட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.






இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாட்டில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல்வேறு துயரங்களைக் கடந்து தடுப்பூசி போடும் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண