Post Office: தபால் நிலைய சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


வங்கிகளில் சேமிப்பு கணக்கு இல்லாதவர்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்ற அறிவிப்பு அனைவருக்கும் அறிந்த ஒன்று. வங்கி இல்லாத சிறிய கிராமங்களில், தபால் நிலையத்தில் வங்கி கணக்கு தொடங்குவது மிக சிறப்பான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.


தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு
தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், இனி ஆன்லைனில் தங்களது பாஸ் புக்கை பெற்றுக் கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தங்களது சேமிப்பு தொகை திட்டத்தை இ-பாஸ்புக் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் தேவ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.


மத்திய அமைச்சர் தேவ் சிங் சவுகான் 
இது குறித்து மத்திய அமைச்சர் தேவ்சிங் சவுகான் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் புதிய அறிவிப்பு விளக்கம் தெரிவித்தார். மேலும் இதில் அவர் கூறியதாவது, விரைவான மற்றும் வெளிப்படையான சேவையை மையமாக கொண்டு தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருபவர்களுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய வசதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். அதுபோன்று தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இ-பாஸ்புக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.






இந்த வசதி மூலம் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலமே தங்களது சேமிப்பு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வசதியை அனைத்து தபால் நிலையங்களிலும் ஏற்படுத்துவதற்கான தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும். எந்த நேரத்திலும் பரிவர்த்தனையை அறிந்து கொள்ள முடியும். தபால் நிலைய சேமிப்பு கணக்கை வைத்திருப்பவர்கள் ஆன்லைன் பாஸ்புக்கை முதலில் தங்களது மொபைலில் டவுன்லோடு செய்ய வேண்டும். பின்பு சேமிப்பு கணக்கு செய்து லாகின் செய்ய வேண்டும். அந்த பக்கத்தில் சென்று இருப்பு மற்றும் ஸ்டேட்மெண்ட்டை பார்க்கலாம். மினி அறிக்கை தேவைப்பட்டால் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.