கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 14 நாட்கள் க்வாரண்டைன் செய்யப்பட்டும் அறிகுறிகளும் உபாதைகளும் தொடர்வதாக பொதுமக்கள் தெரிவிப்பதாக மருத்துவர் கூறுகின்றனர். கொரோனா தொற்று க்வாரண்டைனுக்கு பிறகும் அறிகுறிகள் தொடர்கிறதா? என்ன சொல்கிறார் மருத்துவர் பிரபு மனோகரன்?


1. கொரோனா தொற்று லேசாக இருந்தால், பதினான்கு நாட்களுக்கு க்வாரண்டைன் செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதற்குப்பிறகும் அறிகுறிகள் தென்படுவதாக பலரும் சொல்கிறார்கள் ஏன்?


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லேசான அறிகுறிகளுடன் இருந்து, தனிமைப்படுத்திக்கொண்ட பின்பும் கூட, அறிகுறிகள் நீடிக்கலாம். வைரஸ் தொற்று முழுமையாக நீங்காமல் இருக்கும் நிலையில் மார்பு பகுதியில் லேசான அழுத்தம், சோர்வு, மயால்ஜியா எனப்படும் தசை வலி போன்ற அறிகுறிகள் இருக்கலாம். பதற்றம் அடையாமல், மருத்துவர் பரிந்துரைத்த விட்டமின் மருந்துகளையும், புரதச் சத்து மிகுந்த உணவுகளையும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஓய்வு எடுக்க வேண்டும். காற்றோட்டம் கொண்ட அறையில் இருக்கவேண்டும்.


2. கோவிட் க்வாரண்டைனுக்கு பின்பும் மூச்சுத்திறணல், சுவாசத்தில் சிரமங்கள் இருந்தால் என்ன செய்யவேண்டும்?


கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு மூச்சுத்திறணல் இருந்தால், அவர்கள் மருத்துவமனை அனுமதி பெற்றாக வேண்டும். மிகவும் லேசான அறிகுறிகள் இருந்து, க்வாரண்டைனுக்கு பிறகு மார்புப் பகுதியில் அழுத்தம், சுவாசப் பிரச்சனை ஆகியவற்றை எதிர்கொண்டால், மருத்துவரை அணுகுவது அவசியமானது. சிடி ஸ்கேனுக்கு பிறகு அவர் உங்களுக்கான மருந்துகளையும், உணவுமுறைகளையும் பரிந்துரைப்பார். 


3. Covid Recovery காலத்தில் மூச்சுப் பயிற்சிகள் பலனளிக்குமா?


ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் பலனளிக்கும். ஆனால், மூச்சுத்திணறல், சுவாச சிரமங்களின்போது மருந்துவரின் பரிந்துரைப்படியே அனைத்தையும் பின்பற்ற வேண்டும். இணை நோய்கள் கொண்டவர்கள் நிச்சயமாக தங்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் உடல் இயக்கத்துக்கான கூறுகளை சோதித்துக்கொள்ளவேண்டும். Self medication-ஐ தவிர்க்கவேண்டும். உங்களின் அறிகுறிகள் அதிகமானால், D Dimer எனப்படும் சோதனையை மேற்கொண்டு, உங்களுக்கு தேவையான சிகிச்சையை அளிப்பார்.


4. Post Covid Care எனப்படும் கோவிட் தொற்றுக்கு பிறகான பராமரிப்பு வழிகளைப் பற்றிக்கூறுங்கள்..


Post Covid Care என்பது மீட்புக்காலம். உங்களின் எதிர்ப்புத்திறனை மீட்கும் காலம் என்பதாக சொல்லலாம். புரதச்சத்து நிறைந்த உணவுகள், ரெட் மீட் எனப்படும் இறைச்சி உணவு, வைட்டமின் சி நிறைந்த பழங்கள், புரதச்சத்து மிகுந்த தானியங்கள், முலாம்பழம், பப்பாளி போன்றவற்றை உணவில் கட்டாயமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றுக்கு பிறகு சிலருக்கு ஏற்படும் வரும், சுவாசப் பிரச்சனைகளையும், நரம்பு தொடர்பான பிரச்சனைகளையும் மருந்துவரின் துணையுடனும், சிறந்த உணவுமுறைகளின் மூலம் மட்டுமே மாற்றமுடியும்.