கேரளாவின் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டில் மருத்துவர்கள், நோயாளிகள் முன்னிலையில் இணையர்கள் இருவர் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. திருமணம் செய்துகொண்ட பெண் புடவை அல்லாமல் மருத்துவப் பாதுகாப்பு உடையணிந்திருந்தார்.




ஆலப்புழாவின் சரத் மற்றும் அபிராமி இருவரின் திருமணம் 25 ஏப்ரல் அன்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சரத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி அவர் ஆலப்புழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.




இவர்களது திருமணம் கடந்த வருடமே நிச்சயிக்கப்பட்ட நிலையில், அப்போது வெளிநாட்டில் இருந்த சரத் இந்தியாவுக்கு வரமுடியாத காரணத்தால் தடைபட்டது. தற்போது மீண்டுமொருமுறை திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக கொரோனா வார்டிலேயே இருவரும் எளிமையாக தங்களது திருமணத்தை நடத்திக்கொண்டுள்ளனர்.தங்களது திருமணம் நடக்கக் கேரள காங்கிரஸ் தலைவர் தாமஸ், ஆலப்புழா மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர் பெரிதும் உதவியதாக இருவரும் தங்களது நன்றியைப் பதிவு செய்துள்ளனர்.


Also Read: Why Mask Work: தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகும் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்?