சமீப காலமாக நாய் கடிகள் இந்திய அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் குழந்தைகளை தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் நாய்களை கண்டாலே ஏதோ ஒருவித அச்சம் ஏற்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவங்கள் வரிசையில் ஹைதராபாத்தில் புதன்கிழமை இரவு ஸ்ரீநாத் என்பவர் ஹஸ்கி வகை நாயை நடைப்பயிறசிக்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிரே தனுஞ்சய் மற்றும் அவருடன் 2 பேர் நடந்து சென்றுள்ளனர். வளர்ப்பு நாய் தொடர்ச்சியாக இந்த மூன்று நபர்களை பார்த்து குரைத்துள்ளது. அப்போது அந்த நாய் அருகே சென்றது. இதனால் ஆத்திரமடைந்த தனுஞ்சய் அருகில் இருப்பவர்களுக்கு சைகை காண்பித்துள்ளார்.


உடனே இரண்டு பேர் கம்புகளுடன் வந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து ஸ்ரீநாதை கடுமையாக தாக்கியுள்ளனர். 5 பேர் தாக்கியதில் ஸ்ரீநாத் சுருண்டு தரையில் விழுந்தார். ஆனாலும் 5 பேர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட ஸ்ரீநாதின் உறவினர்களான இரண்டு பெண்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தாக்குதலை தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் அந்த பெண்களையும் சேர்த்து தாக்கியுள்ளனர்.


இதற்கிடையில் அங்கிருந்த வளர்ப்பு நாய் தன் வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தது. இதனை கண்ட நபர் உடனே அந்த நாயை விரட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் எழ முடியாமல் தரையில் விழுந்தது. பின் அக்கம் பக்கத்தினர் விரைந்து அந்த கும்பலை களைக்க முயன்றனர். பெரும் போராட்டத்திற்கு பின் அவர்கள் அனைவரும் களைந்து சென்றனர்.


ஸ்ரீநாத் மற்றும் குடும்பத்தினர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.       


கடந்த செவ்வய்கிழமை ஸ்ரீநாத் மற்றும் தனஞ்சய் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.