சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் பிஜாப்பூர் டாரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், மேலும், 31 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.




இந்நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து, ஜக்தல்பூரில் வைக்கப்பட்டுள்ள வீரர்களின் உடலுக்கு அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகலும் அஞ்சலி செலுத்தினார்.