நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் கொள்கையாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 


கோவாவில் நடந்த ஜி-20 எரிசக்திதுறை அமைச்சர்கள் மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். 


அப்போது அவர் கூறுகையில்,” கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு வழங்கி உள்ளோம். நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வசதி வழங்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. பசுமை எரிசக்தியை பயன்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிளை எடுத்து வருகிறது. ஆற்றல் தனிநபர்கள் முதல் தேசிய அளவில் அனைத்து மட்டங்களிலும் வளர்ச்சியை பாதிக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே  புதைபடிவமற்ற எரிபொருளில் இருந்து மின்சாரம் தாயாரிக்கப்படுதை நாடு எட்டியுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த, சமமான மற்றும் நிலையான வளர்ச்சிக்காக செய்லாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளோம். நமது எண்ணங்களும் செயல்களும் எப்போதும் நமது 'ஒரு பூமி'யைப் பாதுகாக்கவும், நமது 'ஒரு குடும்பத்தின்' நலன்களைப் பாதுகாக்கவும், பசுமையான 'ஒரு எதிர்காலத்தை' நோக்கிச் செல்லவும் உதவ வேண்டும்.” என்றார்


மேலும்.” ஒவ்வொரு நாடும் வெவ்வேறு யதார்த்தத்தையும், ஆற்றல் மாற்றத்திற்கான பாதையையும் கொண்டிருந்தாலும், நாட்டின் நீடித்த வளர்ச்சியே முதன்மையானது.  பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாகவும் இருக்கிறது. இருப்பினும், இன்னும் வேகமாக காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க எடுக்க வேண்டிய பொறுப்பான நடவடிக்கைகளை நோக்கி வலுவாக நகர்ந்து வருகிறது.  2030- ஆம் ஆண்டுக்குள் புதைபடிவமற்ற எரிசக்தி திறனை 50 சதவீதத்தை எட்டுவதற்கு நாடு திட்டமிட்டுள்ளது. உலக அளவில் சூரிய மற்றும் காற்றாலை மின்சார பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. Pavagada Solar Park, Modhera Solar Village ஆகியவற்றை திட்டப்பணி குழுவினர்  பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நாட்டில் உள்ள 90 சதவீதத்தினருக்கும் குழாய் பயன்படுத்தி எல்.பி.ஜி. வசதி வழங்கப்படும்.


2015 ஆம் ஆண்டில், எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தைத் தொடங்கியன் மூலம் இந்தியா ஒரு சிறிய இயக்கத்தைத் தொடங்கியது. இது உலகின் மிகப்பெரிய எல்இடி விநியோகத் திட்டமாக மாறியது, இது ஆண்டுக்கு 45 பில்லியன் யூனிட்டுகளுக்கும் அதிகமான ஆற்றலைச் சேமிக்கிறது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதற்கான ஏற்றுமதி ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக நாடு மாறி வருகிறது.


நிலையான, நியாயமான, மலிவு, உள்ளடக்கிய மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்தை முன்னெடுப்பதற்கு உலகம் ஜி20 குழுவை எதிர்நோக்கியுள்ளது. சர்வதேச சோலார் கூட்டணியின் ‘One Sun, One World, One Grid’ என்பதில் முன்முயற்சியில் அனைத்து நாடுகளும் பங்கேற்க வேண்டும்.


நம் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறையை வலுப்படுத்துகிறது.  இது நம் ஒவ்வொருவரையும் காலநிலை சாம்பியனாக்கும் இயக்கமாகும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் அனைவரின் நோக்கமும் ‘ One Earth’, ‘One Family’,  ‘One Future’ ஆகியவையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும்.