பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது, “இன்றைய தொழில்நுட்படத்தின் மிகப்பெரிய தயாரிப்பு தரவுகள். இந்தியாவில் தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம். மேலும், அதே நேரத்தில் மக்களை மேம்படுத்துவதற்கான ஆதாரமாக நாங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம்.






இன்று நாங்கள் நமது கோவின் இணையதளத்தை உலகம் முழுவதும் இலவசமாக வழங்குகிறோம். அதை திறந்த மூல மென்பொருளாக மாற்றினோம்.





இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் திறன் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க உதவியது. இது பல்வேறு சிக்கலைச் சமாளிக்க உதவியது. நமது அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளின் பரிணாம வளர்ச்சிக்கு இது பங்களித்துள்ளது.






உதாரணமாக கிரிப்டோகரன்சி அல்லது பிட்காயினை எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து ஜனநாயக நாடுகளும் இதில் ஒன்றிணைந்து செயல்படுவதும், நம் இளைஞர்களை கெடுக்கக்கூடிய தவறான கைகளில் இது முடிவடைவதை உறுதி செய்வதும் முக்கியம்.”






இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.  


உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இணைய வளர்ச்சியை அடுத்து, டிஜிட்டல் பணமான பிட்காயினின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் பிட்காயினை தடை செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்த சூழலில், பிரதமர் மோடி பிட்காயின் விவகாரத்தில் ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண