பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தருண்கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். தருண்கபூர் 1987ம் ஆண்டு ஹிமாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ். கேடராக தேர்வானாவர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். பிரதமர் மோடிக்கு இதற்கு முன்பு அமித்கரே கடந்தாண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டு இருந்தார்.
தருண்கபூருடன் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஆதிஷ் சந்திரா மற்றும் ஹரிரஞ்சன்ராவ் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆதிஷ் சந்திரா 1994ம் ஆண்டு பீகார் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். ஹரிரஞ்சன்ராவ் 1994ம் ஆண்டு மத்திய பிரதேச கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானவர்.
பிரதமர் மோடியின் முக்கிய நியமனங்கள், பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை செயலாளர் பிரதீப்குமார்திரிபாதி அமைச்சரவை செயலகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் கூடுதல் தலைமை செயலாளராக உள்ள ராதாசவுகான் டி.ஓ.பி.டி. செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பு வகிக்கும் பீகார் மாநிலத்தில் பொறுப்பு வகித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய்குமார் இளைஞர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்.கே.ஜி. ரகாதே நீதித்துறை செயாலளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரளா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவேந்திரகுமார் சிங் தேசிய மனித உரிமைகள் ஆணைய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அல்கேஷ்குமார் ஷர்மா மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க : Watch Video: விமானம் தரையிறங்கியபோது விபத்து; திக் திக் திகில் நிமிடங்களின் வீடியோ..
மேலும் படிக்க : மஹாராஷ்டிரா: மசூதிகளில் ஒலி பெருக்கிகளை நீக்குங்கள்; மே 4 வரைதான் கெடு: ராஜ் தாக்கரே எச்சரிக்கை
மேலும் படிக்க : காங்கிரஸ்க்கு நோ... களத்தில் குதிக்க தயார்? - பிரசாந்த் கிஷோரின் அதிரடி ப்ளான் இதுதானா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்