SpiceJet விமானம் மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர் (Durgapur) காஸி நஸ்ரூல் இஸ்லாம் விமான நிலையத்தில் (Kazi Nazrul Islam airport) தரையிறங்கியபோது விபத்து ஏற்பட்டது.
SpiceJet விமான எண் SG-945 -இன் விபத்து குறித்து யுவராஜ் சர்மா (Yuvraj Sharma) என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், டர்புலன்ஸ் பிளைட் மும்பை – துர்காபூர் இடையான பயணத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து வீடியோவுடன் பகிந்துள்ளார்.
மும்பையில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காபூருக்கு பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம், திடீரென நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கிக் குலுங்கியது. இதில் பயணிகளின் பெட்டி உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்தன. இதில் சில பயணிகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஸ்பைஸ்ஜெட் விமான விபத்தில் 40 பயணிகள் காயமடைந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பயணி ஒருவர் கூறுகையில், ”விமானம் தரையிறங்கும் முன் மூன்று முறை குலுங்கியது.சீட் பெல்ட் அணிந்திருந்தோம். ஆனாலும், அது உதவவில்லை. கார் பம்பர் மீது இடித்தது போன்று தோன்றியது” என்றார்.
ஸ்பைஸ் ஜெட் (SpiceJet) குர்கானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு லோ பட்ஜெட் விமான சேவை நிறுவனம். இது 34 இந்திய நகரங்கள் மற்றும் 7 வெளிநாட்டு நகரங்களுக்குத் தினமும் 273-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு (டிஜிசிஏ) விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்