PM Modi Russia Visit: இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி - புதினுடன் ஆலோசனை: 3 நாட்கள் பயணத் திட்ட விவரம்!

PM Modi Russia Visit: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனி விமானம் மூலம் இன்று ரஷ்யா புறப்படுகிறார்.

Continues below advertisement

PM Modi Russia Visit: பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Continues below advertisement

பிரதமர் மோடி ரஷ்யா பயணம்:

இந்தியா-ரஷ்யா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாஸ்கோவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன் மூலம்,  இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பல முக்கிய உலகப் பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடு பற்றியும் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. உக்ரைன் உடனான போரை நிறுத்துவது குறித்தும் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து ஆஸ்திர்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றபின், மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். 

மோடியின் பயண திட்டம்:

ஜூலை 8:

  • இந்திய நேரப்படி காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மாஸ்கோ புறப்படுகிறார்
  • மாஸ்கோ சென்றடைந்த பிரதமர் மோடி, அதிபர் விளாடிமிர் புதினுடன் தனிப்பட்ட விருந்தில் பங்கேற்க உள்ளார். அப்போது இருநாட்டு தலைவர்களும், பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களால் பரஸ்பர நலன்கள் பற்றி பேசுவார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஜூலை 9:

  • காலை 09:00 – 09:45 மணியளவில் பிரதமர் மோடி, மாஸ்கோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றுகிறார்
  • 10:00 மணியளவில் ரஷ்யாவின் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், கிரெம்ளினில் உள்ள கல்லறையில் மோடி அஞ்சலி செலுத்துகிறார்
  • 11:00 மணியளவில் கண்காட்சி மையத்தில் உள்ள கண்காட்சி VDNH கண்காட்சி மையத்தை மோடி பார்வையிடுவார்
  • பிற்பகல் மணியளவில் பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார். அதில் இருநாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள், பொருளாதார கூட்டாண்மை மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் ஆகியவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • பிற்பகல் மணியளவில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை தொடர்ந்து, பிரதமர் மோடி ஒரு விளக்கக் கூட்டத்தில் பங்கேற்பார். அதில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான பாடத்திட்டத்தை பட்டியலிடுவதுடன் ரஷ்ய பயணத்தை பிரதமர் மோடி முடிக்கிறார்.

பிரதமர் மோடி ஆஸ்திரியா பயணம்..!

9ம் தேதி பிற்பகலே பிரதமர் மோடி மாஸ்கோவில் இருந்து ஆஸ்திரியா புறப்படுகிறார். அங்கு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதன்படி, 

  • தூதுவர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ள பிரதமர் மோடி, தொழிலதிபர்கள் பங்கேற்கு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார்
  • ஆஸ்திரேலியா சேன்ஸலர் கார்ல் நெஹம்மரையும் மோடி சந்திக்க உள்ளார்.
  • வியன்னாவில் இந்திய சமூகத்தினரிடையேயும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அத்துடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 10ம் தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்ப உள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola