கர்நாடக மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (27.02.2023) திறந்து வைக்கிறார். 


கர்நாடக மாநிலத்தில் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் நடைபெறும் சமயத்தில், நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க நரேந்திர மோதி கர்நாடகா செல்கிறார். பல்வேறு புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.  நிறைவுற்ற பல நலத்திட்டப் பணிகளையும் அவர் தொடக்கி வைக்கிறார். 


ஷிவ்மோகா விமான நிலையம் திறப்பு


நரேந்திர மோடியின் கர்நாடக பயணத்தின் ஒருபகுதியாக ஷிவமோகா விமான நிலையத்தை நாளை காலை 11.45 மணிக்கு திறந்து வைக்கிறார். மலாந்த் பகுதிக்கு அருகில் 450 கோடி ரூபாய் மதிப்பில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.  விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு, அதன் உள்ளே சென்று விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட இருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


புதிய இரயில்வே திட்டங்கள்


ஷிவமோகா பகுதியில் இரண்டு புதிய ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 
ஷிவமோகா - ஷிகாரிபுரா - ரானேபெனூர் (Shivamogga-Shikaripura-Ranebennur) ரயில் பாதைகள் மற்றும்  ரூ. 100 கோடி மதிப்பீட்டில் கோட்டேகங்குரு (Koteganguru) பகுதியில் அமைக்கப்பட உள்ள புதிய ரயில்வே கோச் பணிமணை ஆகிய இரண்டிற்கும் அடிக்கல் நாட்டுகிறார். ஷிவமோகா - ஷிகாரிபுரா - ரானேபெனூர்  ரயில்வே திட்டம் 990 ரூபாய் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் மலாந்த் பகுதி, பெங்களூரு - மும்பை ரயில் பாதை உள்ளிட்டவைகளை இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சாலை மேம்பாட்டு திட்டங்கள்


தேசிய நெடுஞ்சாலை 776 சி, NH169A, NH169 ஆகிய ரூ.215 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.


நலத்திட்ட பணிகளை தொடக்கி வைக்கிறார்


பின்னர், ஷிவமோகா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் நிறைவுற்றப் பணிகளைத் தொடக்கி வைக்கிறார்.


44 ஸ்மாட் சிட்டி திட்டங்கள், கிராமப் புற திட்டங்கள் என பல புதிய திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஷிவமோகா விமான நிலையம் ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகள் வரை கையாளும் வகையில் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.