மத்திய அரசு கடந்த 23ம் தேதி நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த சூழலில், டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களும், சில முக்கியமான மத்திய அமைச்சர்களும் பங்கேற்பது வழக்கம்.


நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதி, ஜி.எஸ்.டி. வரி பகிர்வு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான நிதி, புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 23ம் தேதி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதன்காரணமாக பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக சில மாநில முதலமைச்சர்கள் அறிவித்தனர்.


நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர்கள் யார்? யார்?



  • மு.க.ஸ்டாலின் ( தமிழ்நாடு)

  • சுக்விந்தர்சிங் சுகு ( இமாச்சல பிரேதசம்)

  • சித்தராமையா ( கர்நாடகா)

  • ரேவந்த் ரெட்டி ( தெலங்கானா)

  • பக்வந்த் மன் ( பஞ்சாப்)

  • பினராயி விஜயன் ( கேரளா)

  • ரங்கசாமி ( புதுச்சேரி)


ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பங்கேற்பாரா? மாட்டாரா? என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர்கள் யார்? யார்?



  • ஏக்நாத் ஷிண்டே ( மகாராஷ்ட்ரா)

  • யோகி ஆதித்யநாத் ( உத்தரபிரதேசம்)

  • பீமாகாண்டு ( அருணாச்சல பிரதேசம்)

  • மாணிக் சாகா ( திரிபுரா)

  • ஹிமாந்த் பிஸ்வா சர்மா ( அசாம்)

  • மோகன் சரண் மஜ்ஹி ( ஒடிசா)

  • விஷ்ணுதியோ சாய் ( சத்தீஸ்கர்)

  • பூபேந்திர படேல் ( குஜராத்)

  • பஜன்லால் சர்மா ( ராஜஸ்தான்)

  • கான்ராட் சங்க்மா ( மேகலாயா)

  • மம்தா பானர்ஜி ( மேற்கு வங்காளம்)


இந்த கூட்டத்தில் அருணாச்சல பிரேதச துணை முதலமைச்சர் சௌனா மெய்னும் பங்கேற்கிறார்.


மத்திய அரசின் 2047ம் ஆண்டு இலக்குடன் சில திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. அதற்கான திட்டங்கள், தொலைநோக்கு பார்வையுடன் நிதி ஆயோக் கூட்டத்தில் சில திட்டங்களை, முடிவுகளை மத்திய அரசு விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசின் பட்ஜெட் இந்தியா கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களை புறக்கணிக்கும் பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் சூழலில், இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட்டில் பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் போதிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறி, 24ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் கண