எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) 10 கோடி ஃபாலோவர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்துள்ளார் பிரதமர் மோடி. எக்ஸ் தளத்திலேயே அதிக ஃபாலோவர்களை கொண்டவர்களின் பட்டியலில் உலக பணக்காரரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு கிட்டத்தட்ட 19 கோடி ஃபாலோவர்கள் உள்ளனர்.


எக்ஸ் தளத்தில் அதிக ஃபாலோவர்களை பெற்றவர்கள் யார்? யார்? அதற்கு அடுத்தபடியாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 13 கோடி ஃபாலோவர்கள் உள்ளனர். அதிக ஃபாலோவர்களை கொண்ட உலக தலைவர்களின் பட்டியலில் ஒபாமாவே முதலிடத்தில் உள்ளார்.


அதற்கு அடுத்தபடியாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். எக்ஸ் தளத்தில் அவரை 11 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.


அமெரிக்க பாடகர்களான ரிஹானா, ஜஸ்டின் பீபர் ஆகியோருக்கும் 10 கோடிக்கும் மேலான ஃபாலோவர்கள் உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது பிரதமர் மோடி இணைந்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "எக்ல் தளத்தில் 100 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ளேன்.


 






புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி: இந்த துடிப்பான ஊடகத்தில் இருப்பதில் மகிழ்ச்சி. கலந்துரையாடல், விவாதம், ஆழமான புரிதல், மக்களின் ஆசிகள், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பலவற்றைப் போற்றுகிறேன். எதிர்காலத்திலும் சமமான ஈடுபாட்டுடன் கூடிய நேரத்தை எதிர்நோக்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.