கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய சவாலை உத்தரப் பிரதேச அரசு திறன்பட கையாண்டதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
உத்தரப் பிரதேசத்தில் தனது வாரணாசி மக்களவைத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் நேற்று அடிக்கல் நாட்டினார். சுமார் ரூ.744 கோடி மதிப்பில் உருவாகும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ வசதி, கொதௌலியாவில் பல அடுக்கு வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் படகு போக்குவரத்து, வாரணாசி - காசிபூர் நெடுஞ்சாலையில் 3 வழி பாலம் உள்ளிட்ட பல்வேறு பொது திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "மாறுபட்ட கொரோனா வகை ஏற்படுத்திய சவாலை எதிர்கொள்வதில் உத்தரப் பிரதேசம் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். முன் நாட்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அழிவை ஏற்படுத்திய மூளை தொற்று பாதிப்பைக் கையாண்டதை பற்றிக் குறிப்பட்ட அவர், மருத்துவ வசதிகள் மற்றும் அரசியல் விருப்பம் இல்லாத நிலையில் சிறு சவால்கள் கூட, பெரியளவில் உருவெடுக்கும்" என்று தெரிவித்தார். ஆனால், இன்று உத்தரப் பிரதேசத்தில், அதிக எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் நடைப்பெறுகின்றன என்று தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது:
சமீபகாலமாக உத்தரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கவனம் செலுத்தி வருகிறது. மேலும், மாநிலத்தின் தற்போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. ஒரு காலத்தில் தலைதூக்கி காணப்பட்ட மாபியா மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள், இன்று சட்டத்தின் பிடியில் உள்ளன.
மகள்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சத்துடன் இருந்த நிலை எல்லாம் தற்போது மாறிவிட்டது. இன்று உத்தரப் பிரதேச அரசு, வளர்ச்சியில் இயங்குகிறது. ஊழல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை போன்றவற்றால் இயங்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில், திட்டங்களின் பயனை மக்கள் நேரடியாக பெறுகின்றனர். அதனால்தான் இன்று, புதிய தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்கின்றன, வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என பிரதமர் கூறினார்.
கூடுதல் மரணங்கள்?
இருப்பினும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு எண்ணிக்கையை விட, பல மடங்கு அதிக மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என பல்வேறு நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, உத்தரபிரதேசத்தில் 24 மாவட்டங்களில் அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடிகையில், ஜூலை 2020 முதல் மார்ச் 2021 வரை 1,97,000 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று article14 டிஜிட்டல் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த ஒன்பது மாதங்களில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட, 43 மடங்கு அதிகமாகும்.
மேலும், வாசிக்க:
1. Kanwar Yatra | கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரை ஏன் - உச்சநீதிமன்றம் கேள்வி..!