- ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், அடுத்தகட்ட தளர்வுகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
- தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
- மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக்கட்சி குழு இன்று மத்திய அமைச்சரிடம் நேரில் சந்தித்து வழங்குகின்றனர்
- கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூபாய் 800 கோடி ஒதுக்கீடு – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- மூன்று நாட்களில் நகரப் பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம் – போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
- டிசம்பர் மாதத்திற்குள் அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை
- ட்ரோன், ஜி.பி.எஸ். மூலமாக நீர்நிலைகளை துல்லியமாக அளவீடு செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஓரிரு நாட்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
- கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு
- கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்தது புதுச்சேரி அரசு
- சுற்றுலா தளங்களை 50 சதவீத சுற்றுலா பயணிகளுடன் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி
- கோடிக்கணக்கில் கடன் மோசடி – புதுக்கோட்டையில் பஞ்சாயத்து தலைவர் கைது
- தமிழ்நாட்டில் புதியதாக 2 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா பாதிப்பு
- கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தில் மேலும் 49 பேர் பலி
- சென்னையில் நேற்று ஒரே நாளில் 148 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
- கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசிகள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை
- போலீஸ் போல வேடமிட்டு தமிழ்நாட்டில் ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த 9 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்
- தேசிய அளவில் பா.ஜ.க.விற்கு எதிராக மாபெரும் கூட்டணி – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இம்மாத இறுதியில் டெல்லி பயணம்
- குஜராத்தில் ரூபாய் ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
- கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும் கவனமின்றி இருந்தால் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி எச்சரிக்கை
- ஆப்கானிஸ்தான் அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு – தலிபான் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
- பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளை சந்திப்பு
Morning Wrap | 16.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்
சுகுமாறன்
Updated at:
16 Jul 2021 06:43 AM (IST)
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
முதலமைச்சர்_முக.ஸ்டாலின்
NEXT
PREV
Published at:
16 Jul 2021 06:43 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -