மொஹரம் இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக அனுசரிக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு அடுத்த பெரிதாக கொண்டாடப்படும் ஒரு மாதம் மொஹரம். ரமலானை போன்று இந்த நாளும் சந்திரனின் பார்த்து மொஹரம் தினம் அறிவிக்கப்படும். இந்த மாதம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகவும், புனிதம் மற்றும் துக்க மாதமாகவும் அனுசரிக்கப்படுவதால் ஒரு ஷியா பிரிவினர் கொண்டாட்டங்களை தவிர்த்து துக்கத்தை அனுசரித்து வருகின்றனர்.


முஹம்மது நபி, மொஹரம் மாதத்தை அல்லாஹ்வின் புனித மாதம் என்று அழைத்ததாக கூறப்படுகிறது. மொஹரம் மாதத்தின் 10 வது நாளை ஆஷூரா என்று இஸ்லாமியவர்கள் அழைக்கின்றனர். அரபு மொழியில் ஆஷூரா என்பது பத்தாவது நாள் என்று பொருள். இந்த நாள் மிகவும் புனிதம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


இஸ்லாமியர்களின் வரலாறுபடி 1443ம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்தை ஆதரித்ததற்காக முகம்மது நபியின் பேரனான இமாம் ஹுசைன் கர்பலா போரில் தலையை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். கொல்லப்படுவதற்கு முன்பு பாலவனத்தில் தாகத்தால் தவிர்த்த அவர்களுக்கு தண்ணீர் தராமல் துன்புறுத்தப்பட்டனர் என கூறப்படுகிறது. இதனை அனுசரிக்கப்படும் விதமாக மொஹரம் மாதத்தில் 10 நாட்கள் துக்க நாட்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனர். 10வது நாள் இமாம் ஹுசைன் கொல்லப்பட்டதால் மொஹரம் 10வது நாளில் நோன்பு வைக்கப்பட்டு தொழுகைகள் நடத்தப்படுகிறது. அதேநேரம் சன்னி பிரிவினர், மொஹரம் நாளை நோன்பு இருந்து ஊர்வலமாக சென்று மார்பில் கத்தியால் அடித்து கொண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். 


தியாகம் மற்றும் துக்கத்தை கூறும் மொஹரம நாளில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இஸ்லாம் மார்க்கத்துக்காக உயிர் விட்ட ஹுசைன் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர், டிவிட்டர் பதிவு மூலம் இரங்கல் கூறியுள்ளார். அவரது பதிவில், இமாம் ஹுசைனின் தைரியம் மற்றும் தியாகம் மக்களுக்கான நீதி மற்றும் கண்ணியத்துக்கான அர்ப்பணிப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.






மொஹரம் அனுசரிப்பை ஒட்டி தமிழகத்தில் பள்ளி மற்றும் அரசு அலுவலங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் தர்கா மற்றும் பள்ளிவாசல்களில் நடந்த வழிபாடு மற்றும் மொஹரம் ஊர்வலத்திலும் இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர். 


மேலும் படிக்க: CT Ravi: பாஜக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவிக்கு காத்திருக்கும் பெரிய பொறுப்பு? காங்கிரஸ் மூத்த தலைவரின் மகனுக்கு முக்கிய பதவி