மோடி இன்று பிரதமராக குடியரசுத் தலைவர்  முன்னிலையில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டார். இதையடுத்து கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களும் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர்.


புதிய அமைச்சரவை:


பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பதவியேற்றுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


18வது மக்களவையின் பதவியேற்பு விழாவுக்கு தெற்காசிய தலைவர்கள் பலரும் வந்தனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹா, பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.


பிரதமராக மோடி பதவியேற்றதையடுத்து, கேபினட் அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களாக தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியைச் சேர்ந்து மொத்தம் 72 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அதில் பிரதமரை தவிர்த்து 30 கேபினட் அமைச்சர்கள் மற்றும்  ( 5+ 36 = 41 ) 41 இணை அமைச்சர்கள் அடங்குவர்.




பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி: image credits:@ANI


கேபினட் அமைச்சர்கள் ( 30 ):



  1. ராஜ்நாத் சிங்

  2. அமித்ஷா

  3. பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி,

  4. ஜெய்சங்கர்

  5. நிர்மலா சீதாராமன்,

  6. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவர் குமாரசாமி

  7. பியூஷ் கோயல்

  8. பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சௌகான்

  9. பாஜக மூத்த தலைவர் ஜே.பி. நட்டா

  10. தர்மேந்திர பிரதான்

  11.  பாஜக மூத்த தலைவர் மனோகர் லால்

  12. தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு

  13. பாஜக தலைவர் சர்பானந்தா சோனோவால்

  14. ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் சிங்

  15. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) நிறுவனர் ஜிதன் ராம் மஞ்சி

  16. பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி

  17. பாஜக தலைவர் ஜுவல் ஓரம்

  18. பாஜக தலைவர் வீரேந்திர குமார்

  19. பாஜக தலைவர் கிரண் ரிஜிஜு

  20. பாஜக தலைவர் ஹர்திக் சிங் பூரி

  21. பாஜக தலைவர் மன்சுக் மாண்டவியா

  22. பாஜக தலைவர் கஜேந்திர சிங் ஷெகாவத்

  23. பாஜக தலைவர் அன்னபூர்ணா தேவி

  24. பாஜக தலைவர் பூபேந்திர யாதவ்

  25. பாஜக தலைவர் ஜோதிராதித்யா மாதவராவ் சிந்தியா

  26. பாஜக தலைவர் அஸ்வினி வைஷ்ணவ்

  27. பாஜக தலைவர் கிரிராஜ் சிங்

  28. லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான்

  29. பாஜக தலைவர் கிஷன் ரெட்டி

  30. பாஜக தலைவர் சி ஆர் பாட்டீல்


மத்திய இணை அமைச்சர்கள்( 5)( Minister of State- Independent Charge ):



  1. ஜிதேந்திர சிங் பாஜக

  2. அர்ஜூன் ராம் மேக்வால் பாஜக

  3. ஜாதவ் பிரதாப் ராவ் கண்பத்ராவ் சிவசேனா

  4. ஜெயந்த் சவுத்ரி ஆர்.எல்.டி

  5. ராவ் இந்தர்ஜித் சிங் பாஜக


மத்திய இணை அமைச்சர்கள் ( 36 ) ( Minister of State ):



  1. ஜிதின் பிரசாத் பாஜக

  2. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் பா.ஜ.க

  3. பங்கஜ் சவுத்ரி பாஜக

  4. கிரிஷன் பால் குர்ஜார் பாஜக

  5. ராம்தாஸ் அத்வாலே இந்திய குடியரசுக் கட்சி

  6. ராம் நாத் தாக்கூர் JD(U)

  7. நித்யானந்த் ராய் பாஜக

  8. அனுப்ரியா படேல் அப்னா தால் (சோனிலால்)

  9. வி.சோமண்ணா பா.ஜ.க

  10. சந்திரசேகர் பெம்மாசானி டி.டி.பி

  11. எஸ்.பி.சிங் பாகேல் பாஜக

  12. சோபா கரந்த்லாஜே பாஜக

  13. கீர்த்திவர்தன் சிங் பா.ஜ.க

  14. பி.எல்.வர்மா பா.ஜ.க

  15. சாந்தனு தாக்கூர் பாஜக

  16. சுரேஷ் கோபி பாஜக

  17. டாக்டர் எல்.முருகன் பா.ஜ.க

  18. அஜய் தம்தா பாஜக

  19. பாண்டி சஞ்சய் குமார் பாஜக

  20. கமலேஷ் பாஸ்வான் பா.ஜ.க

  21. பகீரத் சவுத்ரி பாஜக

  22. சதீஷ் சந்திர துபே பாஜக

  23. சஞ்சய் சேத் பாஜக

  24. ரவ்னீத் சிங் பாஜக

  25. துர்காதாஸ் உய்கே பா.ஜ.க

  26. ரக்ஷா நிகில் காட்சே பாஜக

  27. சுகந்தா மஜும்தார் பாஜக

  28.  சாவித்ரி தாக்கூர் பாஜக

  29. டோகன் சாஹு பாஜக

  30. ராஜ் பூஷன் சௌத்ரி பாஜக

  31. பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா பா.ஜ.க

  32. ஹர்ஷ் மல்ஹோத்ரா பா.ஜ.க

  33.  நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா பாஜக

  34. முரளிதர் மோஹோல் பாஜக

  35. ஜார்ஜ் குரியன் பாஜக

  36. பபித்ரா மார்கெரிட்டா பாஜக


ஆகியோர்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.


இந்நிலையில், மக்களவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச்  சேர்ந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.