PM Modi: வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் 'பிரதமர் சூர்யா கர்' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 


2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டின்போது, மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி  வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதன் மூலம் ஒரு வீட்டிற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.  


300 யூனிட் இலவச மின்சாரம்:


இந்த நிலையில், வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் 'பிரதமர் சூர்யா கர்' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 


இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக, நாங்கள் பிரதமர் சூர்யா கர் என்ற திட்டத்தை தொடங்குகிறோம். ரூ.75,000 கோடி செலவில், ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் 1 கோடி வீடுகளுக்கு சோலார் மின்சாரத்தை கொண்டு வர இத்திட்டம் வழிவகுக்கும். 


மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும் கணிசமான மானியங்கள் முதல் சலுகைகளுடன் கடன்கள் வரை, சோலார் மின்சாரக் களங்களை வீடுகளில் அமைப்பதில் மக்களுக்கு கூடுதலாக செலவுகள் சுமை இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். 


"1 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம்"


முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தில் தொடர்புள்ள அனைத்து பயனர்களையும் ஆன்லைன் போர்ட்டலில் ஒருங்கிணைக்கப்படுவார்கள். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாய்த்துகள் வரை வீட்டின் மேல் சோலார் பேனல் (rooftop solar systems) அமைக்க ஊக்குவிக்கப்படும். இந்த திட்டம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களை இணைக்கும் வசதியாக இருக்கும். 






இந்த திட்டம் மூலம் மக்களின் வருமானம் பெறுகுவதோடு, மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும். pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பிரதமர் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனாவை வலுப்படுத்துமாறு அனைத்து மக்களையும், குறிப்பாக இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். 




மேலும் படிக்க


MSP: விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த காங்கிரஸ்.. ராகுல் காந்தியின் முதல் தேர்தல் வாக்குறுதி!