இந்தியாவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில்  ஒன்று பெங்களூரு. ஐடி ஹப்பாக மாறியிருக்கும் பெங்களூருவில் அதிகரித்த வாகனங்கள் காரணமாக, போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த இயலாததாக உள்ளது. கோடிக்கு அதிகமான வாகனங்களை கொண்ட பெங்களூருவில் சுமார் 40 ஆயிரம் போக்குவரத்து சந்திப்புகள் உள்ளன.


நடுரோட்டில் போலீசாரின் விரலை கடித்த இளைஞர்:


இவற்றில் கிட்டதட்ட 400 சாலை சந்திப்புகள் சிக்னல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், 600 சந்திப்புகளில் சிக்னல்கள் இன்றி, போக்குவரத்து காவலர்களால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  


ஒவ்வொரு சிக்னல்களிலும் போக்குவரத்து விதிமுறைகள் மீறுபவர்களை போலீசார் பிடித்து அபராதமும் வசூலித்து வருகின்றனர்.  இந்த நிலையில், பெங்களூருவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீஸாரின் கையை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கடித்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


அந்த வீடியோவில், பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இதனால், வழக்கம்போல் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞரை போலீசார் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.  


வைரல் வீடியோ:


ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதற்காக அந்த இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அந்த நேரத்தில் இளைஞர்,  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போலீசாரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நீடித்த நிலையில்,  ஆத்திரத்தில் அருகே நின்றுக் கொண்டிருந்த போலீசாரின் கையை பிடித்து கடித்துள்ளார்.






 இந்த  காட்சிகள் இணையத்தில்  வைரரலகி வருகிறது.  அந்த வீடியோவில்,  இளைஞர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் போலீசார் வண்டி சாவியை எடுத்திருக்கின்றனர். இதனால், சாவியை போலீசாரிடம் பறிக்க முயன்றபோது, போலீசாரின் கையை கடித்திருக்கிறார் இளைஞர். 


இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீசாரிடன் தகராறில் ஈடுபட்டவர் சையத் சஃபி (28)  என்பது தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்குச் செல்லும் போது ஹெல்மெட் அணிய மறந்துவிட்டதாகவும் சையத் சஃபி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.  




மேலும் படிக்க


அதிகரிக்கும் குழந்தைத் திருமணம்; 3 ஆண்டில் 1448 சிறுமிகளுக்கு மகப்பேறு: வெளியான அதிர்ச்சி தகவல்!