நாட்டின் மிகப் பெரும் ட்ரோன் திருவிழாவான ’பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022’ நிகழ்ச்சியை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.


இந்தியாவின் ஆற்றல்


தொடர்ந்து இவ்விழாவில் பேசிய மோடி, மத்திய அரசின் சிறந்த கொள்கைகளால் ட்ரோன் பயன்பாடு நாட்டில் அதிகரித்துள்ளது என்றும், விவசாயம், மீன்பிடித் தொழில்களில் ட்ரோன் பயன்பாடு சிறந்த பலனைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார். 


 






மேலும், உலகளாவிய ட்ரோன் மையமாக மாறும் அளவுக்கு இந்தியாவுக்கு ஆற்றல் உள்ளது எனத் தெரிவித்த மோடி இனி ஒவ்வொரு மாதமும் அரசு அதிகாரிகளுடன் பிரகதி கூட்டத்தை ஏற்பாடு செய்து, ட்ரோன்கள் உதவியுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


பாதுகாப்புத்துறையில் ட்ரோன் பயன்பாடு


தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அரசாங்கத் திட்டங்களில் இறுதி வாடிக்கையாளர்கள் வரை விநியோகிக்க தொழில்நுட்பம் வழிவகுத்துள்ளது. பாதுகாப்புத் துறை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றில் ஆளில்லா விமானம் அல்லது ட்ரோன் பயன்பாடு மேலும் அதிகரிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.


 






2 நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சி


பாரத் ட்ரோன் மஹோத்சவ் நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடைபெறும் நிலையில், அரசு அலுவலர்கள், ட்ரோன் தொழில் முனைவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட ஆயிரத்து 600 பிரதிநிதிகள் விழாவில் கலந்து கொள்கின்றனர்.


70க்கும் மேற்பட்ட அரங்குகள் இவ்விழாவில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்களில் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கமும் இங்கு அளிக்கப்பட உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண