PM MODI: ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா இந்தியாவுக்கு வருகை புரிந்தார். இந்தியா வந்த ஜப்பான் பிரதமருக்கு, இந்திய பிரதமர் மோடி விருந்து வைத்தார். அப்போது, ஜப்பான் பிரதமருடன், பிரதமர் மோடி பானிபூரி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில், ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர். அங்கு அவர்கள் லஸ்ஸி, பானி பூரி, ஆம்-பன்னா மற்றும் பொரித்த இட்லிகளை சாப்பிட்டனர்.


பிரபல இந்திய உணவாகவும், பலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக உள்ளது பானி பூரி. பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பானி பூரிகளை சாப்பிடும் ஜப்பான் பிரதமரின் வீடியோவை பதிவிட்டார். கிஷிடா, பிரதமர் மோடியுடன் பூரியை சாப்பிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது மற்றும் மில்லியன்கணக்கான லைக்குகளைப் பெற்றுள்ளது.






பிரதமர் மோடி பானிபூரிகளை சாப்பிடும் படங்களையும் வெளியிட்டு. "எனது நண்பர் பிரதமர் கிசிடா இந்திய உணவுகளை ரசித்தார்" என தெரிவித்துள்ளார்


உக்ரைன் மோதல் தொடர்பான உலகளாவிய புவிசார் அரசியல் கொந்தளிப்பு மற்றும் இந்தோ-பசிபிக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தை குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில் ஜப்பானிய பிரதமர் திங்களன்று கிட்டத்தட்ட 27 மணி நேர பயணமாக டெல்லி வந்தார். இந்தியாவின் ஜி 20 தலைவர் பதவி மற்றும் ஜப்பானின் ஜி 7 தலைவர் பதவி குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.


Also Read: RCB-W vs MI-W LIVE: 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி மும்பை அணி வெற்றி ..!


Also Read:TN Agri Budget: ரேஷன் கடைகளில் இனிமேல் கேழ்வரகு, கம்பு - வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு