PM Modi: பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் ஒருமுறை கூட விடுமுறை எடுத்தது இல்லை என ஆர்டிஐ தகவலில் கூறப்பட்டுள்ளது.


2014ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி 2018ம் ஆண்டு இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் பிரதமரானார். வெளிநாடுகளுக்கு செல்வது, முதலீடுகளை ஈர்ப்பது, மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு நலத்திட்ட நிகழ்வுகளில் பங்கேற்பது, மாதத்திற்கு ஒருமுறை நாட்டு மக்களிடம் மன் கி பாத் நிகழ்வு மூலம் வானொலியில் பேசுவது என எப்பொழுது தன்னை பிசியாகவே பிரதமர் மோடி வைத்துள்ளார். 


இந்த நிலையில் பிரதமரின் விடுப்பு குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல், அவரை பற்றி விமர்சிப்பவர்களுக்கு வாயடைப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆர்டிஐயில் எழுப்பபட்ட கேள்விக்கு மத்திய பொது தகவல் அதிகாரியும், பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளருமான பர்வேஷ் குமார் பதில் அளித்துள்ளார். 


அதில், கடந்த 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுத்ததில்லை என்றும், எப்பொழுதுமே அவர் பிரதமர் பணியிலேயே இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரதமராக பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் ஒருநாளைக்கு ஒரு நிகழ்ச்சியிலாவது பங்கேற்கும் பிரதமர் இதுவரை 3000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐக்கு அளிக்கப்பட்ட பதிலை டிவிட்டரில் வைரலாகி வருகிறது.






இதேபோல் பிரதமர் மோடியின் பணி குறித்து பேசி இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்தா, கடந்த 20 ஆண்டுகளில் பொதுப்பணியில் இருந்து மோடி ஒருநாள் கூட விடுமுறை எடுத்தது இல்லை என கூறி இருந்தார். இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு பிரதமரின் விடுமுறை தொடர்பான ஆர்டிஐ கேள்விக்கும், மோடி ஒருநாள் கூட விடுமுறை எடுத்ததில்லை என பிரதமர் அலுவலகத்தின் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டிருந்தது. 


மேலும் படிக்க: Udhayanidhi Complaint: சனாதன தர்மம் சர்ச்சை.. பிகாரில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பறந்த புகார்..


Bharat Jodo Yatra: தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய ஒற்றுமை நடைபயணம்.. அதேநாளில் சம்பவம் செய்ய காத்திருக்கும் காங்கிரஸ்