யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது பாரதத்தின் நாகரிக பாரம்பரியத்திற்கான ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் இப்போது யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த உலகளாவிய கௌரவம் இந்தியாவின் ஞானத்தையும் கலை மேதைமையையும் கொண்டாடுகிறது.
இந்த காலத்தால் அழியாத படைப்புகள் பொக்கிஷங்களை விட மேலானவை. இவை பாரதத்தின் உலகக் கண்ணோட்டத்தையும், நாம் சிந்திக்கும், உணரும், வாழும் மற்றும் வெளிப்படுத்தும் விதத்தையும் வடிவமைத்த தத்துவ மற்றும் அழகியல் அடித்தளங்கள். இதன் மூலம், இந்த சர்வதேச பதிவேட்டில் நம் நாட்டிலிருந்து இப்போது 14 கல்வெட்டுகள் உள்ளன என மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி:
இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்துக்கும் வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம். யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்திற்கும், வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமாகும். கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரிகத்தையும் உணர்வையும் வளர்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவு உலகிற்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Also Read: Toll: இனி ஃபாஸ்ட் டேக் இல்லையா..செயற்கைக்கோள் டோல்தானா! உண்மை என்ன?