Toll: இனி ஃபாஸ்ட் டேக் இல்லையா..செயற்கைக்கோள் டோல்தானா! உண்மை என்ன?

Satellite Toll - FASTag: மே 01ஆம் தேதி முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச் சாவடி கட்டணம் செலுத்தும் முறைதான் தொடங்கப்படும் என தகவல் பரவி வரும் நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Continues below advertisement

Satellite Toll - FASTag: இந்தியா முழுவதும் இனிமேல் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச் சாவடி கட்டணம் செலுத்தும் முறை தொடங்கப்படும் எனவும், இது மே 01 முதல் நடைமுறைக்கு வருகிறது என தகவல் பரவி வரும் நிலையில், மத்திய தேசிய சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

Continues below advertisement

இது தொடர்பாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, 2025 மே 01 முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச் சாவடிக் கட்டண முறை (டோலிங் சிஸ்டம்) தொடங்கப்படும் என்றும், தற்போதுள்ள ஃபாஸ்டேக் அடிப்படையிலான சுங்கச் சாவடி வசூல் முறைக்கு இது மாற்றாக இருக்கும் என்றும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Also Read: ரூ.50 கோடிக்கு நாயா!..வீட்டுக்கே சென்ற ED: கடைசியில்தான் டிவிஸ்ட்!

இந்நிலையில் 2025 மே 01 முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கச்சாவடி கட்டண முறையை நாடு தழுவிய அளவில் செயல்படுத்துவது குறித்து சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலை அமைச்சகம் அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இதுபோன்ற எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மேலும், சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்களின் தடையற்ற பயணத்தை செயல்படுத்தவும், பயண நேரத்தைக் குறைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஏஎன்பிஆர் - ஃபாஸ்டேக் (ANPR - FASTag) அடிப்படையிலான நடைமுறை செயல்படுத்தப்படும்.

Also Read: இந்தியாவின் சோதனை வெற்றி: விமானங்களை அழிக்கும் லேசர் ஆயுதம்!

மேம்பட்ட சுங்கச் சாவடி கட்டண அமைப்பு 'தானியங்கி வாகன எண் (நம்பர் பிளேட்) அங்கீகாரம்' (ஏஎன்பிஆர்) தொழில்நுட்பத்தோடு இணைக்கப்படும். இந்த நடைமுறையில் வாகனங்கள் அவற்றின் நம்பர் பிளேட்கள் மூலம் அடையாளம் காணப்படும். மேலும் கட்டணக் நடைமுறைக்கு, ரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை (ஆர்.எஃப்.ஐ.டி) பயன்படுத்தும் தற்போதுள்ள 'ஃபாஸ்டேக் அமைப்பும் இணைக்கப்படும். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியமில்லாமல், உயர் செயல்திறன் கொண்ட ஏஎன்பிஆர் கேமராக்கள், ஃபாஸ்டேக் ரீடர்கள் மூலம் வாகனங்களுக்கு அவற்றின் அடையாளத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் செயல்திறன், பயனர் அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், நாடு முழுவதும் இதை செயல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola