பிரதமர் இன்று திறந்துவைப்பதாக இருந்த, கொல்கத்தா சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தை தாம் ஏற்கனவே திறந்து வைத்துவிட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பிரதமரிடம் கூறியிருக்கும் செயல் பலரின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.   


பிரதமர்  நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (சிஎன்சிஐ) இரண்டாவது வளாகத்தைப்  தொடங்கி வைத்தார். அதன்பின் நடந்த காணொளி மூலம்  நடைபெற்ற உரையாடைலில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  


 


ஃபோன், கேம்... கதிகலங்கச் செய்யும் பின்னணி!எச்சரிக்கும் மருத்துவர்! | Dr Saranya Interview | Online


                         


 


கூட்டத்தில் இருந்தோரிடையே பேசிய மம்தா பானர்ஜி, "புற்றுநோயால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கும் நடுத்தர வகுப்பினருக்கும் பயனுறும் வகையில் அமைந்துள்ள இந்த வளாகத்தை பிரதமர் திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருந்தாலும், கொரோனா இரண்டாவது பேரலையின் போதே இந்த வளாகம் திறந்து வைக்கப்பட்டது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.   


கொரோனா இரண்டாவது அலையில் கொரோனா  சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டோம். மக்களின் இன்னல்களை உடனடியாக கலையும் பொருட்டு வளாகத்தை திறந்து வைத்தோம். ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த இரண்டாவது வளாகத்தில் மேற்கு வங்க அரசு ரூ. 140 கோடியை வழங்கியுள்ளது. மீதத் தொகையை மத்திய அரசு வழங்கியது.  மாநில அரசின் பங்கு இருப்பதால், இதை திறக்க முன்வந்தோம். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இரண்டு முறை அழைப்பு விடுத்ததன் காரணமாக இன்று கலந்து கொண்டேன்" என்று தெரிவித்தார். 


மேலும், மேற்கு வங்கத்திற்கு கூடுதல் தடுப்பூசியை வழங்கிட மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும் என்று இந்த கூட்டத்தின் மூலம் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.   


முன்னதாக, கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "மத்திய அரசால் மேற்கு வங்கத்திற்கு இதுவரை கட்டணமில்லாமல் 11 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான சுவாசக் கருவிகளும், 9 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய ஆக்சிஜன் சிலிண்டர்களும் வங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் 49 புதிய பிஎஸ்ஏ ஆக்சிஜன் தொழிற்கூடங்களும், தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.



இரண்டாவது வளாகம்:  


புற்றுநோய் கண்டறிதல், நோய் பரவும் நிலை, சிகிச்சை, கவனிப்பு ஆகியவற்றுக்கான அனைத்து உள்கட்டமைப்புகளுடன் 460 படுக்கை வசதி கொண்ட விரிவான புற்றுநோய் மையமான இந்த வளாகம் அமைந்துள்ளது. அணு மருத்துவம் (பிஇடி), 3.0 டெஸ்லா எம்ஆர்ஐ, 128 ஸ்லைஸ் சிடி ஸ்கேனர், அணுக்கதிரியக்க சிகிச்சைப் பிரிவு போன்ற நவீன வசதிகளை இந்த வளாகம் கொண்டுள்ளது. புற்று நோய்க்கான நவீன ஆராய்ச்சி வசதிகளுடன் செயல்படவிருக்கும் இந்த வளாகம் புற்று நோயாளிகளுக்கு, குறிப்பாக  நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு  ஒருங்கிணைந்த சிகிச்சையை வழங்கும்.


கட்டாயம் வாசிக்க: 


ABP Nadu Exclusive | ‛முதலில் ஹார்மோன் சுரக்கும்... பின்னர் டோபமைன் அதிகம் சுரக்கும்’ ஆன்லைன் விளையாட்டும் ஆபத்தும்!