நாடு முழுவதும் நாளை 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தேசிய கொடிகளை வீடு தோறும் ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, நேற்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய கொடியை மக்கள் வீடுகளில் ஏற்றி வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்று தேசிய கொடி ஏற்றி மக்கள் கொண்டாடுவதை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடியையும், மூவர்ணக் கொடியின் நிறத்தில் ஜொலிக்கும் கட்டிடங்களையும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்